பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

1௦9


திருப்பி அனுப்பி, உற்சாகமாக விரட்டிப் போகின்ற உணர்வினைத் தவிர்த்து விடுவதும் உண்டு. அத்தகைய நிலை ஒரிரு முறை நேர்ந்தால், பரவாயில்லை என்று சமாளித்துக் கொள்ளலாம். அடிக்கடி நேர்ந்துவிடுமாயின், அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். ஆடுகின்றவரின் வேகத்தையும் உற்சாகத்தையும் ஓட்டிவிடும் என்பதால், போட்டியில் பங்கு பெறுவோர், போட்டியின்போது செய்கின்ற தவறுகளையும், அவற்றைத் தவிர்த்து ஆடுகின்ற விதிகளையும் கீழே தந்திருக்கின்றோம்.

1. கோகோ ஆட்டம் மிகவும் வேகமான ஆட்டம், விரைவுடன் சுறுசுறுப்புடன் ஆடுகின்ற ஆட்டம். குறைந்த ஆட்ட நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையில் எதிராட்டக்காரர்களைத் தொட்டு ஆட்டமிழக்க வைப்பதற்காக முயல்கின்ற ஆட்டம். ஆகவே, இதில் மெதுவாக நடப்பதோ, ஒடுவதோ, மெதுவாக விரட்டுவதோ என்பதெல்லாம் இருக்கக் கூடாது.

விரைவான ஒட்டம், விரைவான சிந்தனை, விரைவான செய்கை அனைத்தும் தேவை என்பதை ஒவ்வொரு ஆட்டக்காரரும் உணர்ந்து, அதற்கேற்ப தயார் நிலையில் சென்று போட்டியில் பங்கு பெற வேண்டும்.

2. விரட்டுபவர் உட்கார்ந்திருக்கின்ற சதுரக் கட்டத்தின் அளவு 30 செ.மீ. X 30 செ.மீ. என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்ததுதான். நடுக் கோட்டினைத் தொடுவதுபோல உட்கார்ந்திருக்கக் கூடாது. நடுக்கோட்டைத் தொடாமல் தான் உட்கார வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/111&oldid=1377557" இலிருந்து மீள்விக்கப்பட்டது