பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கோகோ ஆட்டம்


கட்டத்திற்குள் சரியாக உட்காராமல் இருந்தால் என்ன என்று கேட்கலாம். சரியாக உட்காராமல் இருக்கும் பொழுது கோ கொடுக்கப்பட்டால், அந்த நேரத்தில் எழுந்து ஓட வேண்டியிருக்குமே! தவறாகத் தொடங்கி விட்டால், நினைத்த இடம் நோக்கி எப்படி சரியாக ஓட முடியும்?

அத்துடன் அல்லாமல், சரியாக உட்கார்ந்திருக்கா விட்டால், சட்டென்று எழுந்து ஓடமுடியாத சங்கட நிலையில்தான் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான், உட்கார, எழ, ஓட என்பதற்காக, கட்டத்திற்குள் ஒழுங்காக, அழகாக, சரியாக அமர்ந்திருக்க வேண்டியது மிகமிக முக்கியமாகும்.

3. ஓடி விரட்டுபவராக (Active chaser) விரட்டிக் கொண்டிருப்பவர், உட்கார்ந்திருப்பவருக்குக் கோ கொடுக்க விரும்பினால், அவர் உட்கார்ந்திருக்கும் கட்டடத்தைக் குறிக்கின்ற குறுக்குக் கோடுகளைக் (Cross Lane) கடந்து வந்துவிடாமல், அவைகளுக்கு இந்தப்பக்கம் இருந்தேதான் கோ கொடுக்க வேண்டும்.

உட்கார்ந்திருப்பவருக்குப் பின்புறமுள்ள குறுக்குச் கோட்டினைக் கடந்து வந்துவிட்டால், அவரைக் கடந்து வந்துவிட்டதாகத்தான் அர்த்தம். அதற்குப் பிறகு அவருக்கு கோ கொடுக்கும் உரிமையை அவர் இழந்துவிடுகின்றார். அவ்வாறு கடந்து போகாமல், ஓட்ட நேரத்தில் ஓட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கோ கொடுத்திட வேண்டும்.

குறிப்பு: இந்தக் குறுக்குக் கோட்டு நினைவை பலர் ஆட்ட நேரத்தில் மறந்துவிட்டு, ஆட்ட வேகத்தில் கோட்டைக் கடந்த பிறகு கோ கொடுக்க, நடுவர் அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/112&oldid=1377551" இலிருந்து மீள்விக்கப்பட்டது