பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o I os- ro

I 6Ծ)6Ն)ԱI * **** Վ)IԾ6Ն6Ծ)6Ն)ԱԼIII 戀 يت الالعاطلون 16ه

111

பார்த்தவுடன் விசிலை ஊதி, அவரை அடுத்து உட்கார்ந்திருப்பவரை நோக்கி ஒடச் செய்ய, இவ்வாறு தாமதப்படுத்திவிடுவது மட்டுமல்லாமல், ஆட்ட வேகத்தையும் குறைத்து விடக்கூடும்.

இந்த உண்மையை பலர் புரிந்து கொள்ளாமல், வேண்டுமென்றே நடுவர் விசில் ஊதுகிறார் என்று சிலர் கூறுவதும்; நடுவருக்கு ஊதவே தெரியவில்லை என்று குறை கூறிப் பேசுவதையும் ஒவ்வொரு போட்டி ஆட்டத்திலும் கேட்கலாம். இதுபோலவே சில நேரங்களில், குழுக்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கும் குழு பயிற்சியாளர்களும், குழு மேலாளர் களுமே பேசுவதுண்டு.

இந்த நிலை ஏற்படாமல், கோ கொடுப்பவர் எச்சரிக்கையாக இருந்து கோ கொடுக்க வேண்டும்.

4. தன்னால் முடியாத நிலையில்தான், உட்கார்ந்திருப் பவருக்கு கோ கொடுத்து எழுப்ப வேண்டியிருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆட்டக்காரரும் அறிவார்கள்.

அவ்வாறு உதவக்கூடிய நிலையில் எழுப்பிவிடும் போது, நாம் எச்சரிக்கையுடன் எழுப்ப வேண்டும் என்பதைத்தான் நாம் நன்றாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.

ஒரு சிலர், எதிராட்டக்காரரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்ற ஆவேச உணர்வில், கிடீரென்று வந்து, உட்கார்ந்திருக்கும் தன் பாங்கர் மீது விழுந்து எழுப்பிவிடுவதுண்டு.

வேறு சிலர் அவரைத் தூக்கி எறிவது போல கீழே °க கொடுத்து வெகு வேகமாக தூக்கி விடுவதும் உண்டு.