பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 113

终 క్షేత్తీ கிடைப்பதற்கு முன், உட்கார்ந்திருக்கும் இடத்தை விட்டு எழவோ அல்லது எழுவது போல் கொடுக்கின்ற அசைவோ இருக்கக் கூடாது.

அவசரப்பட்டு அசைந்தால், அது கோ கொடுக்கப் பட்டது போன்ற நிலைமையை உருவாக்கும். அந்த சமயத்தில் ஒட்டக்காரர் மறுபுறம் வர ஒடி விரட்டுகின்றவர்களிடமே சிக்கிக் கொள்கின்ற நிலையும் ஏற்படலாம். ஆகவே உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு ஆட்டக்காரரும், தனக்குக் கோ கிடைக்கின்ற நேரம் வரை காத்திருந்தே, பிறகு எழுந்தோட வேண்டும். கம்பத் தருகில் உட்கார்ந்திருக்கும் முதல் கட்ட ஆட்டக்காரருக்கு இது முற்றிலும் பொருந்துவதாகும்.

கோ கிடைக்காமல் கட்டத்தை விட்டு எழுகின்ற தன்மை தவறான ஆட்ட முறையாகும்.

6. கோ கிடைக்கப் பெற்றவுடன் எழுந்து ஒடுகின்ற ஆட்டக்காரர், உடனே திரும்பி எந்தப்பக்கம் போகிறோம் என்பதை அசைவின் மூலம் காட்டிக் கொண்டு விடக் கூடாது. அப்படி எந்தப் பக்கம் போகிறார் என்பது தெரிந்துவிட்டால், ஒட்டக்காரர்கள் உடனே அந்தப் பக்கம் போவதுபோல ஒரு போக்கு காட்டிவிட்டு, வேறுபக்கமாக ஒடி தப்பித்துக் கொள்வார்கள்.

வேறு சில ஒட்டக்காரர்கள், கடைக் கோட்டின் ஒரமாக நின்று கொண்டு இவ்வாறு ஏய்த்து விட முயல்வார்கள். அந்த ஏய்க்கும் முறையை தந்திரமாகவே இவர் சந்திக்க வேண்டுமென்றால், புத்திசாலித்தனமாக விரட்டி ஒடும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

அதாவது, தான் நேரே பார்த்துக் கொண்டிருக்கின்ற கிசையைப் பார்த்துக் கொண்டே ஓட வேண்டும்.