பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

115



ஒரு ஆட்டக்காரர் தொடப்படும்வரை, அவரையே குறி வைத்துவிரட்டுவதுதான் அறிவான ஆட்டமாகும். அப்பொழுதுதான் அவரும் விரைவில் களைத்துப்போய் விடக்கூடும். கொஞ்ச நேரம் ஒருவரையும், பிறகு வேறொருவரையும் விரட்டிவிட்டால், தொடப்படக் கூடிய அந்த ஓட்டக்காரர் அதற்குள் ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு மீண்டும் நன்றாக ஓடத் தயாராகி விடுவார். அதனால், ஒருவரையே குறிபார்த்து விரட்டுவதுதான் நல்ல ஆட்டமாகும்.

8. விரட்டுகின்ற வாய்ப்பு கிடைக்கின்ற ஒரு ஆட்டக்காரர், கம்பத்தைத் தொட்டுவிட்டு அதற்குப் பிறகு வந்துதான் அடுத்தவரைத் தொட்டு கோ கொடுக்க வேண்டும் என்றோ அல்லது சரியான வாய்ப்பு கிடைக்கும் பொழுதுதான் கோ கொடுக்க வேண்டும் என்றோ நினைத்துக் கொண்டு, விருப்பம் போல் ஓடக்கூடாது.

அடுத்து கோ கொடுத்தால் தான், ஆளைத் தொடுகின்ற வாய்ப்பும் எளிதாகக் கிடைக்கும். வீணாக ஓடி நேரத்தை வீணாக்கிவிடக் கூடாது.

அதேபோல, ஓட்டக்காரர்களும் இந்தக் கம்பத்திற்கும் அந்தக் கம்பத்திற்கும் என்று ஓடி அசந்து போய்விடக் கூடாது. சங்கிலி ஓட்ட முறை அல்லது வேறு பல தந்திர முறைகளைக் கையாண்டு, அதிகம் களைப்படையாதவாறு ஓடிட வேண்டும்.

9. ஆட்ட நேரத்தின்போது, ஆளை விரட்டித் தொடுகின்ற வேகத்தின் உச்சக் கட்டத்தில், நேராக ஓடிப்போய் கம்பத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/117&oldid=1377568" இலிருந்து மீள்விக்கப்பட்டது