பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 薊 117

விசில் ஒலிக்குப் பிறகு ஒடிய நேரமெல்லாம் வீணாகித்தானே போயிற்று? அதற்குள் ஒட்டக்காரர்கள் ஓடாமல் நின்று ஒய்வு எடுத்துக் கொண்டு விடுவார்களே! இதனை உணர்ந்து கொண்டு நடுவரின் விசில் ஒலி கேட்ட உடனே, ஏன் எதற்காக என்று கேட்டு அறிந்து அதன்படி செய்தால்தான் நேரத்தைக் காத்துக் கொண்டு ஆட முடியும். விரைவாக ஒட்டக்காரர்களைத் தொட்டு வெளியேற்றவும் முடியும்.

11. ஒரு ஒட்டக்காரரின் உடலையோ அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ தொட்டால்தான் தொடப்பட்டது என்பது அர்த்தமல்ல, உடையின் ஒரு பகுதியைத் தொட்டாலும் தொடப்பட்டது என்பதுதான் விதியாகும்.

அந்த அடிப்படையில் பார்த்தால், ஒட்டக்காரர்கள் தொள தொளவென்று சட்டையைப் போட்டுக்கொண்டு ஆடுவது நல்லதல்ல என்றே நமக்குப்படுகிறது. பெண்களும் முடியைக் கட்டாமல் சில சமயங்களில் குதிரைவால் கொண்டை என்பார்களே, அதுபோல ரிப்பன் போட்டுக் கட்டிக் கொண்டு ஆடுகின்றார்கள். வேறு சிலர், சடை பின்னித் தொங்கப்போட்டுக் கொண்டு வந்தும் ஆடுகின்றார்கள்.

அவர்கள் ஒரு பக்கமாக வேகமாகத் தப்பி ஒடும்போது, சடையானது துள்ளி மேலே மேலே வந்து போவதும் உண்டு. அவ்வாறு விழுகின்ற சடையைத் தொட்டாலும் சரி அல்லது முடியைத் தொட்டாலும் சரி, அவர் தொடப்பட்டவராகவே அறிவிக்கப்படுவார் (Out). அதனால், பெண்கள் கொண்டை போட்டுக் கொண்டு ஆடுவதுதான் அறிவுடைய செயலாகும். அதுவே