பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கோகோ ஆட்டம்



தாயக மக்களின் அன்புக் கரங்களிலே தான் தவிழ்ந்து கொண்டிருக்கின்றனவே தவிர இன்னும் வெளியேறிப் போய்விடவில்லை.

இந்தியாவிலே பிறந்துவிட்டதால் மட்டும்தான் அதற்கு இந்தப் புகழாரமா என்றால், அல்ல அல்ல. வீட்டைத் துறந்து காட்டுக்குப் போய் முனிவரான எல்லோரையுமா ஏடுகள் போற்றுகின்றன? ஒரு வசிஷ்டர், ஒரு விசுவாமித்திரர் இவர்களைத் தானே நமக்குத் தெரிந்து கொள்ள முடிகிறது!

எத்தனையோ கூடி விளையாடும் குழு ஆட்டங்கள் இந்தியாவில் தோன்றியிருந்தாலும், கபடியும் கோகோவும் தான் இந்திய விளையாட்டுத் துறையின் இரு கண்களாக விளங்குகின்றன. காரணம் என்ன வென்றால், இந்த இரு ஆட்டங்களும் இந்தியாவின் பழங்காலப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பிரதிபலிப்பனவாக விளங்குகின்றன.

எளிமை, அடக்கம், பணிவு எனும் மூன்று பண்புகளும், இந்திய நாட்டுக் கலாசாரத்தின் மூலங்களாகும். எளிமையான வாழ்வு உயர்ந்த லட்சியம். இதுவே இந்தியப் பண்பாட்டின் எழில் விளக்கமாகும். கோகோவும் சடுகுடுவும் இதனையே பிரதிபலித்து, பெரிதுபடுத்திக் காட்டுகின்றன.

இந்திய நாடு முழுமையும் கிராம மக்களால் காலங்காலமாக இந்த ஆட்டங்கள் ஆடப்பெற்று வருவதற்கும் காரணம் இருக்கத்தான் இருக்கிறது. கிராம மக்களையும் கூட்டங்கூட்டமாகத் தன்னகத்தே இழுத்துக் கொண்டு, சந்தோஷமான சூழ்நிலையை சடுகுடுவும் கோகோவும் உருவாக்கி விடுகின்றன. ஆடுவதற்கென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/12&oldid=1377542" இலிருந்து மீள்விக்கப்பட்டது