பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 * கோகோ ஆட்டம்

o

ஒடுவதற்குரிய பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கும்.

12. விளையாடும்போதும், வாயில் எதையாவது போட்டு மென்று கொண்டே விளையாடுவது ஒரு சிலருக்குப் பழக்கமாக இருக்கிறது.

ஆட்ட நேரத்தில் எதையும் தின்பது அல்லது மென்று அசை போட்டுக் கொண்டிருப்பது என்பது விதிமுறைக்கு ஒவ்வாத பழக்கமாகும். ஆட்ட நேரத்தில் தின்னும் பழக்கம் தவிர்க்கப் பட்டிருக்கின்றது. தடுக்கப் பட்டிருக்கின்றது.

அவ்வாறு உண்பதானது அபாயத்தை விளைவிக்கும். மேல் நாட்டில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய ஒரு நடுவர், சூயங்கம் உண்ணும் பழக்கம் உள்ளவர். அதை வாயில் வைத்து அசைபோட்டுக் கொண்டேயிருந்த பொழுது, திடீரென்று ஒரு ஆட்டக்காரர் 'அவுட் ஆகிவிட, இவர் அவசரத்தில் 'அவுட் என்று கத்த, வாயிலிருந்த சூயங்கம் போய் தொண்டையில் சிக்கிக்கொள்ள, பிறகு, மூச்சுவிட முடியாமல் திணறி இறந்து போனார் என்ற செய்தி பத்திரிக்கையில் வந்தது. நீங்களும் படித்திருக்கலாம்.

'வேலை செய்யும் பொழுது வேலையைச் செய். விளையாடும்போது விளையாடு’ என்பது பழமொழி. அதுபோலவே உண்ணும் நேரத்தில் மட்டுமே உண்ண வேண்டும். இல்லையேல், உபத்திரவத்துக்கு ஆளாகிவிட வேண்டும் என்பதை உணர்ந்து, நிறுத்திக் கொண்டுவிட வேண்டும்.

ஒரு ஒரத்தில் நின்று கண்காணிக்கின்ற நடுவருக்கே இந்த அவல முடிவு ஏற்பட்டது என்றால், ஆடி ஒடி