பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


念 - பரபரப்புடன் ஆடுகின்ற ஆட்டக்காரர்களுக்கு இது போன்ற ஒரு நிலை ஏற்பட எத்தனை நேரம் பிடிக்கும்? வீண் வம்பை நாமே விலைக்கு வாங்கிக் கொள்ளலாமா!

119

எஸ்.நவராஜ் செல்லையா

இவ்வாறு, எதையும் தின்பது என்கின்ற பழக்கத்தை போட்டி நடத்துபவர்கள், நடுவர்கள் வந்து கேட்டு, எச்சரித்துத் தடுத்திட வேண்டும் என்று வாதிடுவோரும் உண்டு. நமக்குரிய பாதுகாப்பை நாமே தான் தேடிக் கொள்ள வேண்டும். எல்லோரும் வந்து நமக்காகப் பாதுகாப்பளிப்பார்கள் என்று எண்ணுவது அறிவீனம்.

நலம் தேடி விளையாடப் போகின்ற நாம், நல்லொழுக்கங்களை நன்கு கடைபிடித்து நல்ல பண்புகளை வளர்க்கின்ற விதங்களில், நன்முறையில் விளையாட வேண்டும் என்ற நல்வழியைப் பின்பற்றி ஒழுகினால், தீராத துன்பமும் தீர்ந்து, மாறாத இன்பம் மழையாகப் பொழிய மகிழலாம்.

எல்லா விளையாட்டுகளுக்கும் முன்னோடியாகப் பயன்படுமாறு, உடலைப் பதப்படுத்தி, நெகிழ்ச்சி மிக்கதொரு நிலையினை உண்டாக்கிவரும் கோகோ ஆட்டத்தினை, இந்திய நாட்டு இனிய ஆட்டமாக உணர்ந்து புகழுட்டுவோம். புகழ் பெறுவோம்.