பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கோகோ ஆட்டம்


இருக்கிறது. இதனை அறிந்து கொள்ள முயன்றவர்கள் 'திக்குத் தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தேன்' என்ற பாட்டிற்கு சான்றாகப் போயிருக்கின்றார்கள்.

மகாபாரதத்தில் ஆராய்ச்சி வல்லுநரான ஒருவர், கோகோ ஆட்டம் மகாபாரத காலத்திலிருந்தே ஆடப் பட்டு வருவதாக ஒரு கருத்தினைக் கூறியிருக்கிறார். மகாபாரதம் என்றாலே துரியோதனாதிகளுக்கும், பஞ்சபாண்டவர்களுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த யுத்தமும் போராட்டமும் தான் என்பது நமது நினைவுக்கு வரும்.

அந்தப் போர்க்களங்களிலே, நால்வகை சேனைகள் அணிவகுத்து நின்று போரிடும், அவை வியூகம் அமைத்து நிற்கையிலே உள்ளே நுழைந்து, போரிட்டு வெற்றி பெற்று மீண்டும் வரும் வீர தீரச் செயல்களில் ஈடுபடுவது வீரர்களின் வழக்கம். அதுவே தொன்று தொட்டு வரும் பழக்கமுமாகும்.

அவ்வாறு சேனைகளை நிறுத்தி வைத்திருக்கும் முறைகளில் ஒருவகைக்கு ரதோடா (Rathoda) என்பது பெயராகும். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேனைகளுக்கிடையே குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியை (Chariots) ஓட்டிக் கொண்டு வீரர்கள் புகுந்து போரிடுவது ஒரு முறை, அந்த சாரட்டு வண்டியானது எவ்வாறு சேனைகளுக்கிடையே செல்லும் என்றால், தற்போது கட்டங்களில் உட்கார்ந்திருப்பவர் களுக்கிடையே ஓட்டக்காரர் ஓடிச் செல்கின்றாரே அதுபோல் அமைந்திருந்தது என்பதாகும். அவ்வாறு ஓட்டிய பழக்கமே, நாட்டில் இதுபோன்ற கோகோ ஆட்டம் தோன்றிட வழிவகுத்திருக்கும் என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/14&oldid=1377544" இலிருந்து மீள்விக்கப்பட்டது