பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13

எஸ்.நவராஜ் செல்லையா

கிருஷ்ணபகவானே இதுபோன்ற ஆட்டத்தை ஆடியிருப்பதாகவும் ஒரு கதையைக் கூறுவார்கள். இந்தக் கருத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஒரு உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாம் வாழுகின்ற யுகம் கலியுகமாகும். மகாபாரதம் நடந்ததாகக் கூறப்படுவது துவாபர யுகமாகும். ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே எவ்வளவோ ஆண்டுகள் இடைவெளியுண்டு. ஆகவே, எத்தனையோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆட்டம் இது என்பதைத்தான் நாம் ஒத்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது.

அக்கால வழக்கப்படி, எல்லோரும் வலிமையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும். போரிடுவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற நிலையிலேதான், போருக்கு வேண்டிய அடிப்படை தகுதிகளையெல்லாம் விளையாட்டின் மூலமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விளையாட்டுக்களின் ஆதிகால வரலாற்றினைப் படிக்கும் பொழுது, காட்டிலே மனிதன் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தபோது, மிருகங்களுடன் யுத்தம் செய்ய நேர்ந்தது. உயிர் பிழைப்பதற்காக, அதே யுத்த நிலை அடிக்கடி எழ ஆரம்பித்ததும், அதற்காக தங்களுக்குள்ளே மனிதர்கள் மல்யுத்தம் செய்து பழகிக்கொள்ள நேர்ந்தது என்றும், கொடிய மிருகங் களிடமிருந்து தப்பிப் பிழைக்க ஒடியும், பள்ளங்களைத் தாண்டியும் சென்றார்கள். மிருகங்களைக் கொல்ல கூர்மையான ஆயுதங்களை எறிந்தது வேலேறிதல் என்பதாக மலர்ந்தது என்பது போல, ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/15&oldid=557467" இருந்து மீள்விக்கப்பட்டது