பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 கோகோ ஆட்டம்

§§

இதுவரை கோகோ ஆட்டம் அகில மகாராஷ்டிர சரீரிக்சிக்ஷன் மண்டலமெனும் கழக நிர்வாகத்தின் கீழ்தான் கட்டுப்படுத்தப்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. இன்று இந்திய அமெச்சூர் கோகோ கழகம் அளிக்கின்ற விதிமுறைகளே அகில இந்திய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தோன்றிய ஆட்டங்களை ஒரு சேரப் பார்க்கும்போது, ஒரு உண்மை நமக்குத் தெள்ளிதின் பளிச்சென விளங்குகிறது. இவைகளில் மிக முக்கிய மானவை கபாடி, கோகோ, அத்யா பத்யா (Atya Patya) இம்மூன்று ஆட்டங்களிலும் கோடுகள் சுற்றிப் போடப்பட்டிருக்கின்றன. அவைகளும் மிக எளிதாகவே அமைக்கப்படுபவையாகும்.

இந்த மூன்று ஆட்டங்களிலும் 9 ஆட்டக்காரர்களே தான் இருக்க வேண்டுமென்று வரையறுத்திருக்கின்றனர். ஆடுகின்ற நேரமும் கோகோ அத்யா பத்யா' இரண்டிலும் 'ஒரு முறை ஆட்டத்திற்கு (Inning) 7 நிமிடங்களே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கபாடிக்கு மட்டும் 10 நிமிடங்கள்.

மிகக் குறைந்தகால அளவிற்குள் ஆடி முடித்துவிட வேண்டும் என்கிற நிலையும் அதில் இருந்திருக்கிறது. எளிமை, வலிமை இவையே ஆட்டங்களின் ஜீவனாக விளங்கி வந்திருக்கின்றன.

முன்னெல்லாம் கபாடியிலும், கோகோ ஆட்டத் திலும் ஒரு எதிராட்டக்காரரைத் தொட்டு வெளியேற்றி விட்டால் (Out) 10 வெற்றி எண்களைக் கொடுத்து வந்தார்கள். தற்போது ஒரு வெற்றி எண்ணே தரப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/18&oldid=557470" இருந்து மீள்விக்கப்பட்டது