பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


2. கோகோ ஆட்டத்தின் விதிகள்

I. ஆடுகளத்தின் அளவுகள்

1. கோகோ ஆட்டத்தின் ஆடுகளமானது 29 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு நீண்ட சதுர வடிவமைப்பினை உடையதாகும்.

2. கோகோ ஆடுகளத்தில் இரண்டு நீண்ட சதுரப் பகுதிகள் (Rectangles) உண்டு . ஒவ்வொரு நீண்ட சதுரப்பகுதியும் 15 மீட்டர் நீளமும் 2.75 மீட்டர் அகலமும் கொண்டு குறிக்கப்பட்டிருக்கிறது. சதுரப் பகுதியின் அகலமும், ஆடுகளத்தின் அகலமும் ஒரே அளவுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க குறிப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/23&oldid=1377410" இலிருந்து மீள்விக்கப்பட்டது