பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 龜 25 மீட்டர் தூரமுள்ளதாக இருக்கும். இரண்டு பக்கக் கோடுகளும் (Side Lines), இரு நீண்ட சதுரங்களின் வெளி எல்லையைக் குறிக்கின்ற கோடுகளும் சேர்ந்து, ஆடுகளத்தின் எல்லைகளை அமைக்கின்றன.

9. ஆடுகள எல்லையைக் குறிக்க இடுகின்ற ஒவ்வொரு கோடும் 2.5 சென்டிமீட்டரிலிருந்து 3 சென்டி மீட்டருக்குள்ளான அளவுள்ளதாகப் போடப்பட வேண்டும்.

ஆடுகள எல்லையின் அளவானது போடப்படுகின்ற கோட்டின் அகலத்தையும் சேர்த்தே கணக்கிடப் படுகின்றது.

10. ஆடுகள எல்லைகளுக்கு அப்பால் 2.75 மீட்டர் தூரத்தில் தொடரிடம் (Lobby) சுற்றிலும் அமைக்கப் பட்டிருக்கிறது.

II. விளையாட்டிற்குள் சில விளக்கங்கள் I. EFņLGLIEuň (Chaser)

சதுரக்கட்டங்களில் உட்கார்ந்திருக்கும் ஆட்டக்

காரர்கள் அனைவரும் 'விரட்டுவோர்' என்று அழைக்கப்படுகின்றார்கள். எட்டுக் கட்டங்களிலும் 8 விரட்டுவோர் இருப்பார்கள்.

2. 919 sout’ Queuff (Active Chaser)

(கட்டத்தில் உட்காராமல்) கம்பத்தருகில் நிற்கும் ஒரு ஆட்டக்காரர், எதிர்க் குழுவைச் சேர்ந்த, தப்பி ஓடும் ஒட்டக்காரர்களைத் தொடர்ந்தோடி, அவர்களைத் தொடும் நோக்கத்துடன் விரட்டிக் கொண்டு ஒடும் பொழுது, ஒடி விரட்டுபவர் என்று அழைக்கப் படுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/27&oldid=557479" இருந்து மீள்விக்கப்பட்டது