பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கோகோ ஆட்டம்


 13. லோனா (Lona)

ஒரு குழுவில் உள்ள எல்லா ஓட்டக்காரர்களையும் தொட்டு வெளியேற்றிவிடுகின்ற விரட்டும் குழுவினரின் வெற்றி எண் குறிப்பேட்டில், லோனா என்று குறிக்கப்படும்.

(கபாடி ஆட்டத்தில் உள்ளது போல, இங்கு குறிக்கப்படும் லோனாவுக்காக, வெற்றி எண்கள் கொடுக்கப்படுவதில்லை. கபாடியில் உள்ள லோனாவுக்கு 2 வெற்றி எண்கள் (அதிகமாகத்) தரப்படுகிறது.)

பொதுக் குறிப்பு: அவர் என்று மேலே குறிக்கப்பட்டிருக்கும் சொல்லுக்கு அவன் அவள் (He or She) என்று இருபாலாருக்கும் பொருந்துகின்ற பொருளைக் கொள்ள வேண்டும்.

III. விளையாட்டுக்குரிய விதிமுறைகள்

1. நாணயம் சுண்டுவதற்காக முதலில் இரு குழுத்தலைவர்களையும் நடுவர் அழைத்திட வேண்டும். அவர்களில் ஒருவரை அழைத்து, என்ன வேண்டும் என்று கேட்கின்ற உரிமையை தந்து கேட்குமாறு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு, நாணயம் சுண்டியெறிந்ததில் யார் வெற்றி பெற்றிருக்கின்றார் என்ற முடிவினையும் உடனே அறிவித்துவிட வேண்டும்.

2. நாணயம் சுண்டியெறிந்ததில் வெற்றி பெற்ற குழுத்தலைவன், தனது வலது கையை உடனே உயர்த்திக் காட்டிவிட்டு, ஓடும் வாய்ப்பா, விரட்டும் வாய்ப்பா என்பதில் ஒன்றை உடனே நடுவருக்கு அறிவிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/32&oldid=1377682" இலிருந்து மீள்விக்கப்பட்டது