பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கோகோ ஆட்டம்


கோகோ ஆட்டம் மீதியுள்ள ஆறு பேர்களும் வெற்றி எண் குறிப்பாளருக்கு (Scorer) அருகில் அவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் சென்று உட்கார்ந்திருக்க வேண்டும்.

5. தொட்டு வெளியேற்றப்படும் ஓட்டக்காரர் ஒவ்வொருவரும், அவருக்கென்று அமைக்கப்பட்ட கட்டத்தினுள் சென்று அமர வேண்டும்.

6. ஆட்டம் தொடங்கிவிட்ட பிறகு, கட்டங்களில் உட்கார்ந்திருக்கும் விரட்டுபவர்கள், கோ கிடைத்தாலன்றி கட்டத்தை விட்டு எழுவதோ அல்லது உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் திசையை மாற்றி அமர்வதோ தவறான செயலாகும்.

அதே தவறினை திரும்பச் செய்தால், அது ஒழுங்கற்ற செய்கை (Misbehaviour) என்று கருதப்படும்.

7. ஓடி விரட்டுபவரின் உடலில் எந்தப் பகுதியும் நடுக்கோட்டையோ அல்லது நடுக்கோட்டைக் கடந்தோ மறுபுறத்தில் உள்ள தரையைத் தொடக் கூடாது.

8. ஓடி விரட்டுபவர் ஒருவர், கம்பங்களுக்கு உட்புறமாக அமைந்துள்ள நடுக்கோட்டைத் தொடக்கூடாது. (கம்பத்திற்கு உட்புறம் உள்ள நடுக்கோடு (Central Land) என்பது கம்பத்திற்கும் முதலில் உட்கார்ந்திருப்பவருக்கும் இடையில் உள்ள நடுக்கோடாகும்.)

9. ஒருவருக்கு கோ கொடுக்க வேண்டுமானால், கட்டத்தில் உட்கார்ந்திருப்பவரின் பின்புறம் சென்றே ‘கோ’ சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/34&oldid=1377591" இலிருந்து மீள்விக்கப்பட்டது