பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

33


அவ்வாறு ‘கோ’ என்று குரல் கொடுப்பதானது. ஓடுகின்ற ஓட்டக்காரர்களுக்கும், ஆட்ட அதிகாரிகளுக்கும் நன்றாக கேட்குமாறு சத்தமான குரலிலே சொல்ல வேண்டும்.

10. தனக்கென்று ‘கோ’ கிடைக்கும் வரையில் கட்டத்தில் உட்கார்ந்திருப்பவர், தனது இடத்தை விட்டு எழுந்திருக்கவே கூடாது.

11. ஓடி விரட்டும் ஒருவர் கோ கொடுக்கின்ற சமயத்தில், உட்கார்ந்திருப்பவரின் நீட்டப்பட்டிருக்கும் கையையோ அல்லது காலையோ தொட்டு ‘கோ’ சொல்லக் கூடாது.

12. கட்டத்தில் உட்கார்ந்திருப்பவருக்குக் கோ கொடுத்து எழுப்பி ஓடவிட்ட ஓடி விரட்டியவர். முன்னவர் உட்கார்ந்திருந்த சதுரக் கட்டத்தில் உடனே உட்கார்ந்து விட வேண்டும்.

13. உட்கார்ந்திருந்து ‘கோ’ பெற்று ஓடி விரட்டுபவராக மாறியவர், தான் எந்தக் குறுக்குக் கோட்டுக் கட்டத்தில் உட்கார்ந்திருந்தாரோ, அந்தக் குறுக்குக் கோட்டுப் பகுதியில் உள்ள, தான் எதிர்நோக்கியிருந்த திசை நோக்கியே ஓட வேண்டும். அப்படியின்றி, அவர் திரும்பி, பின் வாங்கி ஓடுவது தவறாகும்.

குறிப்பு: அ) காலின் எந்தப் பகுதியாவது குறுக்குக் கோட்டின் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் வரை, அந்த ஓடி விரட்டுபவர் அந்த குறுக்குக் கோட்டைக் கடந்து செல்லவில்லை என்பது உறுதியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/35&oldid=1377596" இலிருந்து மீள்விக்கப்பட்டது