பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 龜 35

18. ஒடி விரட்டுபவர், நீண்ட சதுரப் பகுதியின் தொடர்பை விடுகிறபொழுது எந்த நடுக்கோட்டுப் பக்கமாக நின்று கொண்டிருந்தாரோ, அந்தப் பக்கமாகவே அடுத்து நீண்ட சதுரப் பகுதியை அடைவதற்காகச் செல்ல வேண்டும்.

குறிப்பு: கம்பத்தினருகில் இருக்கும்பொழுது, ஒடி விரட்டும் ஒருவர் அதன் அருகில் உள்ள நடுக்கோட்டைக் கடந்தோ அல்லது தாண்டியோ செல்லக் கூடாது.

19. ஒட்டக்காரர்களுக்குத் தடை எதுவும் நேராத வண்ணம் கட்டங்களில் உட்கார்ந்திருக்கும் விரட்டுபவர்கள் உட்கார்ந்திருக்க வேண்டும்.

அப்படி அவர்கள் உட்காராமல், ஒட்டக்காரர் களுக்குத் தடை ஏற்பட்டு, அதனால் தொடப்பட்டு விட்டால், அவர்கள் தொடப்படவில்லை என்றே அறிவிக்கப்படுவார்கள்.

20. நேராக ஒடுகின்ற முறையைக் குறிக்கும் திசை விதியுள் முகத்தைத் திருப்புகின்ற முறையைக் கூறும் விதிகளும், நீண்ட சதுரப் பகுதியில் பின்பற்றப் படுவதில்லை. அங்கே அவர்கள் விருப்பம்போல் எப்படி வேண்டுமானாலும் ஒடலாம்.

21. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆடுகளத்தைக் குறிக்கும் எல்லைக் கோட்டிற்கு வெளியே ஒடி விரட்டுபவர் போனாலும், ஆடுகளத்தின் உள்ளே கட்டாயமாகப் பின்பற்றப்படுகின்ற திசை இகாள்ளல், முகத்தைத் திருப்புதல் போன்ற விதிகளை பியல்லாம் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/37&oldid=557489" இருந்து மீள்விக்கப்பட்டது