பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கோகோ ஆட்டம்


2. ஒரு முறை ஆட்டம் என்பது (Inning) ஒரு முறை ஓடுகிற வாய்ப்பையும் (Running Turn) ஒரு முறை விரட்டுகிற வாய்ப்பையும் (Chasing Turn) கொண்டதாகும்.

இவ்வாறு பெறுகிற ஒவ்வொரு வாய்ப்புக்கும் 7 நிமிட நேரம் ஆடலாம்.

3. ஒவ்வொரு போட்டி ஆட்டத்திலும் (Match) இரண்டு ‘முறை ஆட்டங்கள்’ உண்டு.

4. ஓடுகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஒரு குழு, தனது ஆட்டக்காரர்கள் ஓடுகின்ற வரிசைப்படி (Order) குறிப்பாளரிடம் (Scorer) கூறி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

5. ஆட்டம் தொடங்கியவுடன், ஓடுகின்ற குழுவின் முதல் மூவர் (First Three) ஆடுகளத்திற்குள் சென்று விட வேண்டும்.

6. முதல் மூவரும் தொடப்பட்டவுடன், அடுத்த மூவர் (Next Three) ஓடி விரட்டுபவர் அடுத்தவருக்குக் ‘கோ’ கொடுப்பதற்கு முன்பே ஆடுகளத்திற்குள் நுழைந்துவிட வேண்டும்.

அந்த நேரத்திற்குள் யார் யார் உள்ளே வராமல் இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக (Out) நடுவரால் அறிவிக்கப்படுவார்கள்.

அதற்குள் விரட்டுபவரும் இன்னொருவருக்கும் கோ கொடுக்கிற நேரத்திற்குள் மூன்றாம் மூவரும் ஆடு களத்திற்குள் வராவிட்டால், அவர்களும் வெளியேற்றப் பட்டார்கள் என்றே அறிவிக்கப்படுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/40&oldid=1377452" இலிருந்து மீள்விக்கப்பட்டது