பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்தவராஜ் செல்லையா 蔥 39 7. முன்னே பதிவு செய்து கொண்டிருந்த வரிசையில் இல்லாமல் ஒடும் வரிசை மாறிவரும் ஆட்டக்காரர் இளையும் (Out ofTurn) வெளியேற்றியதாக (Out) நடுவர் அறிவித்துவிடுவார். இது, அந்த ஆடும் வாய்ப்பு முடிகிற வரைக்கும் தொடர்ந்திருக்கும்.

8. மூவர் மூவராகத்தான் உள்ளே நுழைய வேண்டும். அவர்களில், மூன்றாவது ஆட்டக்காரரைத் தொட்டு வெளியேற்றிய ஒடி விரட்டுபவர், புதிதாக வரும் ஒட்டக்காரர்களை உடனே விரட்டக் கூடாது. அவர் உடனே யாராவது ஒருவருக்குக் 'கோ' கொடுத்துவிட்டு உட்கார்ந்துவிட வேண்டும்.

அவ்வாறு அவர் உட்காராமல், உள்ளே வரும் ஒட்டக்காரர்களைத் தொட முயன்றால், அது தவறாகும்.

மூன்றாவது ஒட்டக்காரர் என்பவர், ஒவ்வொரு முறை நுழைகின்ற மூன்று ஆட்டக்காரர்களிலும் தொடப்படாமல் கடைசியாக ஆடிக் கொண்டிருப்பவர்.

9. ஒவ்வொரு குழுவும் தனது ஒட்டக்காரர்களை ஆடுகளத்தின் ஒரு பக்கத்திலிருந்தே, அதாவது அமர்ந்திருக்கும் கட்டத்திலிருந்தே (Block) அனுப்ப வேண்டும்.

10. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கு (Inning) இடையேயும் 5 நிமிடங்கள் இடைவேளை உண்டு.

ஒவ்வொரு ஆடும் வாய்ப்புக்கு (Tum) இடையேயும் 2 நிமிடங்கள் இடைவேளை உண்டு.

11. ஒட்டக்காரர் ஒருவரைத் தொட்டு வெளியேற்றி விட்டால், விரட்டித் தொட்ட குழுவிற்கு 1 வெற்றி எண் (Point) கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/41&oldid=557493" இருந்து மீள்விக்கப்பட்டது