பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கோகோ ஆட்டம்


3. மீண்டும் வெற்றி எண்கள் சமமாக இருந்தால், அந்தப் போட்டி ஆட்டம் முழுவதையுமே திரும்பவும் ஆட வேண்டும் (Replay). திரும்ப ஆடுகின்ற போட்டியில், முன்னர் ஆடிய ஆட்டக்காரர்களே தான் ஆட வேண்டும் என்பது அவசியமில்லை.

முடிந்து விட்டிருக்கும் முறை ஆட்டங்களில் குறித்திருக்கும் வெற்றி எண்களுடன் மீண்டும் அதே நிலையிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்திட வேண்டும்.

அந்தப் பொழுதிற்குள் தொடரப்படாமல், நிறுத்தப்பட்டுவிட்டால், ஆட்டம் முழுவதுமே திரும்பவும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

ஆட்டக்காரர்களும், ஆட்ட அதிகாரிகளும் முன்பு இருந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

4. தொடராட்டப் போட்டி முறையில் (League System) வெற்றி பெறுகிற குழு 2 வெற்றி எண்களை பெறுகிறது. தோல்வி அடைகிற குழுவிற்கு வெற்றி எண் எதுவும் இல்லை (Zero).

இரு குழுக்களும் வெற்றி தோல்வியின்றி சமமாக ஆடி இருந்தால் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வெற்றி எண்ணைப் பெறும்.

5. தொடராட்டப் போட்டி முறையில், பங்கு கொண்டிருந்த, குழுக்கள் அனைத்தும் சமமான வெற்றி எண்களைப் பெற்றிருந்தால், திரும்பவும் போட்டிகளை முன்போலவே ஆட வேண்டும் (Replay).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/44&oldid=1377470" இலிருந்து மீள்விக்கப்பட்டது