பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

43


அல்லது, சீட்டெடுப்பு மூலம் (Drawing A lot) குழுக்கள் பிரிக்கப்பட்டு, முடிவாட்ட, முறையில் போட்டிகளை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.

6. எந்தக் காரணத்திலாவது ஆட்டம் முடிவு பெறாது நின்றுவிட்டால், அந்த ஆட்டம் அதே ஆட்டக்காரர் களோடு ஒவ்வொரு குழுவிற்கும் முடிவு பெற்றிருந்த அதே ஆடும் வாய்ப்புக்களுடன், அந்தக் குழு பெற்றிருந்த அதே வெற்றி எண்களுடன் அதே ஆட்ட அதிகாரிகளுடன், அதே பொழுதினில் (Session) தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

முடிந்து விட்டிருக்கும் முறை ஆட்டங்களில், குறித்திருக்கும் வெற்றி எண்களுடன் மீண்டும் அதே நிலையிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்திட வேண்டும்.

அந்தப் பொழுதிற்குள் தொடரப்படாமல், நிறுத்தப்பட்டுவிட்டால், ஆட்டம் முழுவதுமே திரும்பவும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆட்டக்காரர்களும் ஆட்ட அதிகாரிகளும் முன்பிருந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

7. ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ‘ஆடும் வாய்ப்பை’ (Turn) முடித்துக்கொள்ள, விரட்டுபவருக்கோ அல்லது ஓடுபவருக்கோ உரிமை உண்டு.

ஓடும் அல்லது விரட்டும் வாய்ப்புள்ள குழுவின் தலைவன், இதைப் பற்றி நடுவரிடம் தெரிவித்து, ஆட்டத்தை நிறுத்த வேண்டி விண்ணப்பித்துக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/45&oldid=1377474" இலிருந்து மீள்விக்கப்பட்டது