பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 கோகோ ஆட்டம்

தங்களின் ஆடும் வாய்ப்பு முடிந்துவிட்டதென்பதை அறிவித்து விட்டால், வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளும் நடுவர், ஆடும் வாய்ப்பு முடிந்ததென்று கூறி, ஆட்டத்தை நிறுத்திவிடுவார்.

ஆட்டம் முடிவு பெற்றதென்று நடுவர் சைகைக் கொடுக்கும்வரை அந்த ஆடும் வாய்ப்பு முடிவு பெறவில்லை.

8. ஒரு குழுவானது, முதல் முறை ஆட்டத்தில் (First Inning) எதிர்க் குழுவை விட 9 வெற்றி எண்கள் அதிகமாக எடுத்திருந்தால், அந்தக் குழுவானது, அடுத்து வருகின்ற விரட்டும் வாய்ப்பை மாற்றிவிட்டு, அடுத்தக் குழுவினரை விரட்டுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று ஆடுமாறு கேட்க உரிமை உண்டு.

அவ்வாறு அவர்கள் தொடர்ந்தாடுமாறு கேட்கிற பொழுது (Follow on) தங்களுக்குரிய விரட்டும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறாமல் கேட்க வேண்டும். ஏனெனில், ஒரு வேளை எதிர்க்குழுவினர் இவர்களை விட அதிகமான வெற்றி எண்களை எடுத்தாலும் எடுக்கலாம். அப்பொழுது அந்த விரட்டும் வாய்ப்பு அவர்களுக்குத் தேவைப்படும் அல்லவா!

9. மாற்றாட்டக்காரர் (Substitute): ஒரு குழுவின் தலைவன் மாற்றாட்டக்காரரை சேர்த்துக் கொண்டு ஆடலாம் என்று விரும்பிக் கேட்டுக் கொண்டால், நடுவர் சேர்த்துக் கொண்டு ஆடலாம் என்று தீர்மானித்து پابواوبى அனுமதித்தால், சேர்த்துக் கொண்டு ஆடலாம்.

10. ஒரு ஒட்டக்காரர் தொடப்பட்டு வெளியேற்றப் பட்டால் (Out), தொடரிடத்தின் வழியாகவே வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/46&oldid=557498" இருந்து மீள்விக்கப்பட்டது