பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


47

எஸ்.நவராஜ் செல்லையா

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கான நாணயம் கண்டியெறிந்து ஆட்டத்தைத் தொடங்குதற்கும் ஆவன செய்ய வேண்டும்.

2. துணை நடுவர்கள் இருவரும் தங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்ற நடுவர் உதவி செய்வதுடன், அவர்கள் இருவருக்குமிடையில் கருத்து

முரண்பாடு ஏதாவது எழும்போது, தன்னுடைய இறுதி முடிவினைத் தெரிவிக்க வேண்டும்.

3. ஒட்டக்காரர்கள் தாங்கள் ஒடுகின்ற வரிசை முறையில் ஆடுகளத்திற்குள் செல்கின்றார்களா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

4. ஆட்டம் நடைபெறுவதை வேண்டுமென்றே தடை செய்கின்ற, பண்புகெட்ட முறையில் நடந்து கொள்கின்ற அல்லது குறும்புத்தனமான செய்கைகளில் ஈடுபடுகின்ற, அல்லது வேண்டுமென்றே விதிமுறை களை மீறுகின்ற ஒரு ஆட்டக்காரரை, நடுவர், எடுக்கின்ற முடிவுக்கு ஏற்றபடி தண்டிக்கலாம்.

அவர் தருகின்ற தண்டனையானது, அவரைக் குழுவிலிருந்து விலக்கி விடுவதுடன், தொடர்ந்து ஆட்டத்தில் பங்கு பெறாமலும் தடை செய்துவிடலாம். அவ்வளவு சக்தி மிக்க உரிமையை நடுவர் பெற்றிருக்கிறார்.

5. நேரக்காப்பாளரின் கடிகாரம் காட்டும் நேரத்துடன் தன் கடிகாரத்தின் நேரத்தையும் நடுவர் சரி செய்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ஆடும் வாய்ப்பு (Turn) சிேடிந்த பிறகும் நேரத்தை சரி பார்த்துக் கண்காணிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/49&oldid=557501" இருந்து மீள்விக்கப்பட்டது