பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை

ஒவ்வொரு விளையாட்டைப் பற்றியும் ஒரு தனி நூல் எழுத வேண்டும் என்பது என் ஆசை. அதன் விளைவாக இதுவரை பதின்மூன்று நூல்களை தனித்தனி விளையாட்டுகளுக்காக எழுதியிருக்கிறேன்.

விளையாட்டின் பிறப்பு, அதன் வளர்ச்சி, ஆக்கப் பூர்வமான வரலாற்றுக் குறிப்புக்கள், விதிகள், விளையாடும் முறைகள், மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்றியமையாத குறிப்புக்கள் என்கின்ற முறையிலே எனது நூல்கள் வடிவம் பெற்று வந்திருக்கின்றன.

விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் எனது தலையாய நோக்கமாகும். அதன் விளைவாக சற்று விரிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடுகிறது.

எனது நூலைப் படிக்கின்ற ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கான அமைப்பிலே எழுதும்போது விளையாட்டில் பயிற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/5&oldid=557457" இருந்து மீள்விக்கப்பட்டது