பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கோகோ ஆட்டம்


6. விதிகளைப் பற்றிய ஐயம் ஏதேனும் வந்து, ஆட்டக்காரர்கள் கேட்டால், நடுவர் அதற்கு விளக்கம் கூறி, தனது முடிவினைக் கூற வேண்டும்.

7. ஒவ்வொரு முறை ஆட்டம் (Inning) முடிந்து விடுகிற பொழுதும், ஆட்ட இறுதி நேரத்திலும், இரு குழுக்கள் எடுத்திருக்கின்ற மொத்த வெற்றி எண்களையும், பிறகு போட்டி ஆட்டத்தின் முடிவையும் தெரிவிக்க வேண்டும்.

8. போட்டி ஆட்டம் விதிகளுக்கிணங்க, சிறப்புற நடந்து முடிவுற, நடுவரது பொதுவான கண்காணிக்கும் திறமையே காரணமாக விளங்குகிறது.

3. நேரக் காப்பாளர் (Time-Keeper)

1. ஒருமுறை நீண்ட ஒலியாலும், ஒரு முறை குறைந்த ஒலியாலும் (One Long and One Short) விசிலை ஊதி, ஆடும் வாய்ப்பினை (Turn) துவக்கி வைக்க வேண்டும்.

2. ஆடும் வாய்ப்பு நேரம் முடிந்துவிட்டதை, நீண்ட விசிலால் தெரிவிக்க வேண்டும்.

3. ஆட்டத்தின் நோக்கத்தைக் (Time) குறித்துக் கொள்வதும், ஒவ்வொரு ‘ஆடும் வாய்ப்பு’ முடிவுறுகிற பொழுது அதைக் குறித்து, குறிப்பாளரிடம் கொடுத்து விடுவதும் இவரது பணியாகும்.

4. நேர்க் காப்பாளரின் பணிகளை பொதுவாக, நடுவர் அல்லது குறிப்பாளர் கவனித்துக் கொள்வார்.

4. குறிப்பாளர் (Scorer)

1. ஒவ்வொரு குழுத் தலைவனிடம் இருந்தும், அவர்களது குழுவின் ஓட்டக்காரர்களின் ஓடும் வரிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/50&oldid=1377484" இலிருந்து மீள்விக்கப்பட்டது