பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கோகோ ஆட்டம்


ஆடும் வாய்ப்பு (Turn) முடியும் வரை நடத்திச் செல்ல வேண்டும்.

அதன் பின்னும், அந்த அதிகாரியால் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை என்றால், வேறொரு அதிகாரியை அவர் இடத்தில் நியமித்து, பணியாற்றச் செய்யலாம்.

5. ஆட்டக்காரர்கள் - மேலாளர்கள் - பயிற்சியாளர்கள்

ஆட்டக்காரர்கள்: 1. ஒரு கோகோ ஆட்டக்காரர் அணிந்து கொள்கின்ற குறைந்தளவு உடையானது பனியன்; கால்சட்டை.

பெண்கள் அல்லது சிறுமிகளுக்குரிய உடையானது கால் சட்டை, மேல் சட்டை (Blouse).

2. ஒவ்வொரு ஆட்டக்காரரும் தான் அணிந்திருக்கும பனியன் அல்லது மேல் சட்டையில் சட்டையின் முன்னும் பின்னும் சட்டையின் வண்ணம் இல்லாத வேறு வண்ணத்தில் 10 சென்டி மீட்டர் X 2 சென்டி மீட்டர் அளவுள்ள எண்ணை முன்புறமும், 20 சென்டி மீட்டர் X 2 சென்டி மீட்டர் அளவுள்ள எண்ணை பின்புறமும் பொருத்தியிருக்க வேண்டும்.

3. ஆட்டக்காரருக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் 1 முதல் 12 வரை இருக்கலாம்.

4. ஒரு குழுவில் ஒருவருக்கு 1 ஆடும் (Number) எண்தான் உண்டு. யாரும் மாற்று எண் வைத்து கொள்ள கூடாது. அந்தத் தொடர் போட்டி ஆட்டம் முடியும் வரை ஒருவருக்குள்ள எண்ணை எக்காரணம் கொண்டும் மாற்றவே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/52&oldid=1377491" இலிருந்து மீள்விக்கப்பட்டது