பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

51


5. ஆட்டக்காரர்களுக்கென்று அமைக்கப்பட்ட இடத்தில்தான் அமர வேண்டும்.

6. போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கூச்சல் போடுவதோ, முறையிடுவதோ, சரி என்று சாதிப்பதோ, அறிவுறுத்துவதோ, அறிவிப்பதோ எதுவும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்பினால், தனது குழுத் தலைவன் மூலமே நடுவரை அழைக்க வேண்டும்.

மேலாளர்கள் - பயிற்சியாளர்கள்

மேலாளர்கள் - பயிற்சியாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அவர்கள் அமர வேண்டும். ஆட்ட நேரத்தின்போது ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகளுக்கு சொல்லித் தருவதோ, அறிவுறுத்துவதோ, பணியாற்ற விடாது தடை செய்வதோ, தாங்கள் செய்வது சரி என்று உரிமைக்குரல் எழுப்புவதோ கூடாது. மீறி செய்தால் நடுவர் அவர்களை இருக்கும் இடத்தைவிட்டு அப்புறப்படுத்தி, பார்வையாளர்கள் பகுதிக்குப் போகச் சொல்லிவிட வேண்டும்.

குறிப்பு: போட்டி ஆட்டத்தை நடத்துகின்றவர்கள் தான், ஆட்ட அதிகாரிகளை நியமிப்பார்கள். ஆட்ட அதிகாரிகள் அனைவரும், நடுவர் காட்டுகின்ற வழியின்படி ஒழுகி சிறப்பாகச் செயல்பட வேண்டும்.


⚫⚫⚫

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/53&oldid=1377498" இலிருந்து மீள்விக்கப்பட்டது