பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


BBBTTA SHS SCB S S S S S હઉઇય્ઃ Wیے۔" ’ے۔ - சிலோன் போன்ற நாடுகளின் ஒரு சில பகுதிகளிலும் ஆனந்தமாக ஆடப்பட்டு வருகிறது.

இந்திய நாட்டின் எல்லா பகுதிகளிலும் கோகோ ஆட்டம் ஆடப்படுகிறது என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும், பல்வேறு இடங்களில், பல்வேறு விதிமுறைகளுடன் தான் ஆடப்பட்டு வந்தது, வருகின்றது என்று கேட்க வேதனையாகவும் இருக்கிறதல்லவா? அந்த வேதனையை மாற்றிட பல்வேறுபட்ட அமைப்பு முறைகளை கட்டுப்படுத்தி, ஒரே விதிகளின் கீழ் கொண்டு வந்து, ஆடப்பட வேண்டுமென்று, புதிய விதிமுறைகளை செப்பனிட்டு ஆட்ட வல்லுநர்கள் நமக்கெல்லாம் தந்திருக்கின்றார்கள்.

அத்தகைய புதிய விதிமுறைகளைத்தான் மேலே காணப்படும், 'ஆட்டத்தின் விதிமுறைகள்’ எனும் பகுதியிலே கண்டோம்.

குறிப்பிட்ட விதிகள் இவைதான் என்று, அகில இந்திய அளவிலே கொடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை முழுவதும் பின்பற்றுவோர் என்பவர் சிலர். தாங்கள் விரும்புவது போல, ஒரு சில (விதிகளுக்குப் புறம்பான) முறைகளை இருக்கின்ற விதிகள் போலவே ஒரு சிலர் கட்டாயமாகப் பின்பற்றிக் கொண்டு ஆடி வருகின்றார்கள்.

அவர்கள் அவ்வாறு ஆடி வருவது விதிக்குட்பட்டதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளாமல், சிற்றவர்களும் தாங்கள் செய்வது என்னவென்று 'ரியாமலேயே அவர்களைப் பின்பற்றி ஆடிக் இகாண்டும் வருகின்றார்கள். அவற்றைத் தவிர்த்தாட வேண்டும் என்கிற எண்ணத்தினால்தான், மற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/55&oldid=557507" இருந்து மீள்விக்கப்பட்டது