பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


பெற்றவர்கள் இன்னும் அதிகத் திறன் நுணுக்கங்களைத் தரலாமே என்ற வினாவையும் விடுக்கின்றார்கள்.

எனது நூலைப் படிக்கும் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள், இவ்வளவு செய்திகள் நமக்குத் தெரிகின்றனவா என்று வியப்புற்று, தங்களையே தட்டிக் கொடுத்துக் கொள்ளவும், ஆசையுடன் படிப்பவர்கள் எல்லா செய்திகளையும் புரிந்து கொள்ள முடியும் என்ற தன்மையிலுமே எழுதப் பெற்று வருகின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த வரிசையிலே வரும் அருமையான நூலாக ஒரு முழு நூலாக, அதிலும் தமிழில் முதல் நூலாக கோகோ ஆட்டம் வெளிவருகிறது. 128 பக்கம் எழுத என்ன இருக்கிறது என்று கேட்டவர்கள் வியக்கின்றார்கள். இன்னும் எழுதியிருக்க முடியும். நான் ஆழ்ந்த திறன் நுணுக்கங்களுக்குள் புகவில்லை.

சிறப்பான விளையாட்டுக்கென்று வழிதிறந்து காட்டியிருக்கிறேன் என்று சொல்ல முடியும். இந்நூலை எழுதுவதற்குள் பல போட்டிகளைப் பார்த்தும், அவற்றிலே குறிப்பெடுத்துக் கொண்டும், வல்லுநர்களிடம் விளக்கம் கேட்டும், அதே நினைவாக நினைத்தும் நடந்தும், இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

முதல் நூலாக வெளிவருவதன் காரணமாக, முழுமையும் பெறாமல் ஒருவேளை அமைந்திருக்கலாம், படிக்கும் அன்பர்கள் விடுபட்டுப்போன கருத்துக்களைக் குறித்து அனுப்பி வைத்தால், மறுபதிப்பில் சேர்த்துக் கொள்கிறேன்.

இந்திய நாட்டு விளையாட்டுத்துறையில் தற்போது கோகோவும் சடுகுடுவும் சிறப்பான இடத்தைப் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/6&oldid=1377595" இலிருந்து மீள்விக்கப்பட்டது