பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 கோகோ ஆட்டம்

தொடப்பட்ட ஒட்டக்காரரை வெளியேற்றிவிட வேண்டும். தவறு செய்தால் அதற்கு என்ன தண்டனையோ, அதைத் தந்துவிட வேண்டும் என்பது தான் அவர்கள் வாதம்.

அது முறையல்ல. ஒரு ஒட்டக்காரரைத் தொட்டு விட்ட பிறகு அதைத் தொடர்ந்து தவறிழைத்தால், ! தொடர்ந்து சரி என்று அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதாகவே விதி தெளிவாகக் கூறுவதால், இந்த விதியை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.

5. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

ஒவ்வொரு விளையாட்டிலும், ஆடுகின்ற ஆட்டக் காரர்களில் நிரந்தர ஆட்டக்காரர்கள் (Regular players): எத்தனை பேர், மாற்றாட்டக்காரர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

கோகோ ஆட்டத்தில், நிரந்தர ஆட்டக்காரர்கள் 12 பேர் என்று கூறப்பட்டிருக்கிறது.

கோகோ விதிகளுக்கிடையிலே, மேகத்திற்கிடையில் மின்னல் போல, ஒரு குறிப்பு கூறப்பட்டிருக்கிறது.

விரட்டும் குழுவைச் சார்ந்த வீரர்கள் எத்தனை முை வேண்டுமானாலும், மாற்றாட்டக்காரராக விளையாட அனுமதிக்கப்படுவர்.

யாராவது ஒரு ஆட்டக்காரர்

நடுவரின் அனுமதிக்குப் பிறகு மாற்றாட்டக்காரர் ஒருவ உள்ளே சென்று ஆட அனுமதி உண்டு என்பதுதான்

அந்த விதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/60&oldid=557512" இருந்து மீள்விக்கப்பட்டது