பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

59


தேசிய அளவில் நடத்தப்படுகின்ற போட்டிகளில், 3 மாற்றாட்டக்காரர்களை அனுமதிக்கின்றார்கள். ஆக ஒரு குழுவில் மொத்தம் 12 ஆட்டக்காரர்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

தேசிய அளவில் நடத்தப்படும் விதிகளுக்கேற்ப 3 மாற்றாட்டக்காரர்களுடன் 9 நிரந்தர ஆட்டக்காரர்களை வைத்துக்கொண்டு ஆடலாம் என்று தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

6. ஆட்டத்தை யார் தொடங்குவது?

எலிகள் சேர்ந்து கொண்டு பூனைக்கு யார் மணி கட்டுவது? என்று கேட்டுக் கொண்டு திகைத்து நின்றதாகக் கதை உண்டு. கோகோ ஆட்டத்தில் புலிகளாக விளங்கும் நடுவர், துணை நடுவர்கள், நேரக் காப்பாளர் இவர்களுக்குள்ளே, யார் ஆட்டத்தைத் தொடங்குவது என்பதிலே எழும் பிரச்சினை பெரிதாகவே அமைந்து விட்டிருக்கிறது.

அதிக அதிகாரம் படைத்தவர் நடுவர், ஆட்டத்தை நடத்திக் கட்டுப்படுத்துகின்ற வல்லமை படைத்தவர்கள் துணை நடுவர்கள். இவர்களில் யாராவது ஒருவர் ஆட்டத்தைத் தொடங்கி (Starting) வைக்கலாம் என்று விதி இருந்தாலும் பரவாயில்லை.

கோகோ ஆட்டத்தில் உள்ள விதிகளில் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

ஒரு முறை நீண்ட ஒலியாலும், ஒரு முறை குற்றொலியாலும் (Long and short whistle) விசிலை ஊதி, ஆடும் வாய்ப்பினை நேரக் காப்பாளர் துவக்கி வைக்க வேண்டும் இதுதான் விதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/61&oldid=1377530" இலிருந்து மீள்விக்கப்பட்டது