பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 戀 கோகோ ஆட்டம்

7. துணை நடுவர்கள் எங்கே நிற்க வேண்டும்?

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது துணை நடுவர்கள் எங்கு நின்று கொண்டு ஆட்டத்தைக் கண்காணிப்பது என்பதில் பல பிரச்சினைகள் அவ்வப் பொழுது எழுவது இயற்கையாகவே போய்விட்டன.

விதிகளில் கூறப்பட்டிருப்பது போல் பார்த்தால், துணை நடுவர்கள் தொடரிடத்தில் (Lobby) நின்று கொண்டு ஆட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

ஆளுக்கொரு பக்கமாகத் தொடரிடத்தில் இருந்து கொண்டு, ஆட்டத்தை நடத்துதல் என்பது, வசதிக்காகக் கூறப்பட்டிருக்கிறது என்றே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில், துணை நடுவர்கள் ஆடுகளத்திற்குள் செல்லக்கூடாது என்பதாக எங்கும் குறிப்பிடப்பட வில்லை என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு சென்றாலும் உடனே வந்துவிட வேண்டும் என்ற செயல் விதியும் புதிய விதியாகப்

பிறந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/62&oldid=557514" இருந்து மீள்விக்கப்பட்டது