பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கோகோ ஆட்டம்


சிறியது. ஆட்டத்தில் ஆட இருக்கின்ற நேரமும் ஏழே ஏழு நிமிடங்கள்தான். ஆட்டத்தில் பயன்படுத்துவதற்கென்று பந்தோ , வலையோ , மட்டையோ, வேறு எதுவும் விலைமதிப்பு உள்ள அத்யாவசியமான பொருட்களோ இல்லாத ஆட்டம்தான்.

ஆனால், இந்த ஆட்டத்தில் பங்கு பெறுவதற்குரிய ஆட்டக்காரரின் தகுதியும் திறமையும் இருக்கிறதே, அது எந்த ஆட்டத்திலும் உள்ள திறன்களுக்கும் நுணுக்கங்களுக்கும் சற்றும் சளைத்ததல்ல என்பதை மட்டும் விவாதிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இதை சொல்லில் மட்டுமே விளக்கிவிட முடிந்துவிடுவதல்ல, ஆடும்போது மட்டுமே ஆற்றலை புரிந்து கொள்ள முடியும். உணர்ந்து கொள்ளவும் முடியும்.

ஒருவர் கோகோ ஆட்டக்காரராகி ஆடுவதற்குரிய தகுதிகளை இனி காண்போம்.

1. உடல்திறம் (Fitness) ஒரு ஆட்டக்காரருக்குரிய முதல் தகுதி உடல் திறம்தான். அதாவது சக்தி நிறைந்த தேகம். ஏழு நிமிடங்களுக்குள் ஓடும் வாய்ப்பு முடிந்துவிடும். ஒரு ஆட்டக்காரர் ஆடுகின்ற நேரம் ஓரிரு நிமிடங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் ஓடுகின்ற தூரம் அதிகம் என்பது மட்டும் கணக்கல்ல.

அந்த ஓரிரு நிமிடங்களுக்குள் விரட்டும் வாய்ப் பென்றால், வேகமாக ஓட வேண்டும். உடனே நிற்க வேண்டும். உடனே கட்டத்துக்குள் உட்கார வேண்டும். திடீரென்று எழுந்திட வேண்டும். உடனே குனிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/64&oldid=1377495" இலிருந்து மீள்விக்கப்பட்டது