பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

63


வேண்டும். தாமதிக்க நேரமில்லாமல், உடனே மீண்டும் உட்கார வேண்டும்.

இவ்வளவு தூரம் செய்கிற ஒரு கடின வேலையை, சொகுசுக்காரர்கள் செய்ய முடியாது. சோம்பல் நிறைந்தவர்களால் நிச்சயம் செய்யவே முடியாது.

உடல் திறம் இல்லாதவர்கள், ஒய்யார நடை பயில்பவர்கள், உல்லாசவாசிகள் இந்த ஆட்டத்தில் ஈடு கொடுத்திட முடியாது. அதற்குத்தான் முதல் தகுதி நெஞ்சுரம் (Stamina) நிறைந்த உடல்திறம் வேண்டும் என்றோம்.

2. முடிவெடுக்கும் திறன்

ஒரு சில விளையாட்டுக்களில் வெற்றியைக் கணிக்க, வெற்றி எண்களை (Points) மிகுதியாக முதலில் பெற வேண்டும். உதாரணமாக, வளையப் பந்தாட்டம், மேசைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்றவை ஆகும்.

ஒரு சில ஆட்டங்களில் இலக்கிற்குள் பந்தை அனுப்பிவிடுகின்ற எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியைத் தீர்மானிப்பார்கள். உதாரணமாக, கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் போன்றவையாகும்.

இன்னும் சில ஆட்டங்களில், எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்து வெளியேற்றுகின்ற எண்ணிக்கையின் மிகுதியைக் காட்டி வெற்றியை முடிவு கூறுவார்கள். உதாரணமாக கிரிக்கெட், மென் பந்தாட்டம், தளப்பந்தாட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/65&oldid=1377578" இலிருந்து மீள்விக்கப்பட்டது