பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

65


 அவ்வாறு முடிவு எடுப்பதானது, தன் சக ஆட்டக்காரருக்கு கோ கொடுத்து உசுப்பிவிடுவதிலும், தம்பத்திற்கு அருகாமையிலுள்ள இடங்களில் வைத்து ஓட்டக்காரர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்வதிலும்; நின்று கொண்டு ஏய்த்துவிடும் ஓட்டக்காரரைச் சாமர்த்தியமாகத் தொட்டுவிடுவதிலும்; ஓய்வெடுத்து நிற்கின்றவரைத் தொடர்ந்து போய் தொட முயல்வதிலும் தான் முடிவெடுக்கும் ஆற்றல் நிறைந்துகிடக்கின்றது.

அவ்வாறு எடுக்கும் முடிவுகளில், அதிகமாகத் திறன் மிகுந்த நுணுக்கங்களும் அடங்கிக் கிடக்கின்றன. அதிலும், எதிர்த்தாடும் ஆட்டக்காரர்களின் ஆட்டத் திறமையை அனுசரித்தே அமைகின்றன.

இவ்வாறு ஆடும் தன்மைக்கு, ஒரு ஆட்டக்காரர் உடலால் மட்டும் ஆடினால் போதாது. மனதாலும் இந்த ஆட்டத்தில் ஒன்றிப் போயிருக்க வேண்டும். இல்லையேல், விரைவாக முடிவெடுக்க முடியாது.

ஓட்டக்காரர்கள் இருக்கின்றார்களே, அவர்கள் அதிக நேரம் ஓடிக் கொண்டிருந்தே தப்பித்துக் கொள்ள முடியாது. தாங்கள் தப்பிக்கின்ற தந்திர முறையை அவ்வப்போது மாற்றிக் கொண்டே ஓடுவார்கள்.

அவர்கள் வளைந்தோடும் சங்கிலி முறை (Zig Zag); மூன்று பேராக மாற்றி மாறி ஓடும் முறை; திடீரென்று இடம் மாறி சமாளித்தல் (Feint) போன்றவற்றில் ஈடுபடும் போது அதனை தெரிந்து கொண்டு அவரை எப்படித் தொடர முடியும் என்று முடிவெடுக்கும் ஆற்றலில் தான் அவரைத் தொட்டு வெளியேற்றிவிட முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/67&oldid=1377604" இலிருந்து மீள்விக்கப்பட்டது