பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 கோகோ ஆட்டம்

விரட்டுபவர்களும், ஒடுபவர்களும் மிகமிகத் தயார் நிலையில் இருந்து ஆட வேண்டிய ஆட்டமாகக் கோகோ ஆட்டம் அமைந்திருப்பதால் இதில் முடிவெடுக்கும் சக்தி வாய்ந்த ஆட்டக்காரரே அற்புதமான ஆட்டக்காரராகத் திகழ முடியும். 3. Geu8(upli, uy8gpib (Speed and Anticipation)

மனம் நினைப்பதற்கேற்ப உடலானது வளைந்தும் நெளிந்தும் இயங்கிக் கொடுத்தால்தான், ஆட்டம் சிறப்பாக அமையும்.

குறுகிய எல்லைக்குள்ளே மிக விரைவாக ஒடினால்தான் தப்பிக்கவும் முடியும். ஒட்டத்தில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, யூகமும் வேண்டும். வெறுமனே ஒடிக் கொண்டிருந்தால் அதை 'காட்டோட்டம்’ என்ற கேலியாகவும் கூறி நகைப்பார்கள் பார்வையாளர்கள்.

ஒடிக் கொண்டிருக்கும் பொழுதே, தாவிக் குதித்து தப்பித்தல் (Diving); சறுக்கி ஓடுதல் (Skating); குறுக் கோட்டம் ஒடுதல் இவற்றிற்கெல்லாம், வேகத்திற்கேற்ப மதியூகம் வேண்டும். o

ஒரு சில சமயங்களில், விரட்டிக் கொண்டு છબ வருபவர் விரைவாக ஓடி வரும்போதே திடீரென்று நின்று உட்கார்ந்திருக்கும் ஆட்டக்காரருக்குக் 'கோ' கொடுத்து விடுதல் என்பதும், உட்கார்ந்திருப்பவர் உடனே அதே வேகத்துடன் ஒடுவது என்பதும், எவ்வளவு சிரமமான திறன் என்பது படிக்கும் பொழுதே புரியும் என்று

கம்பகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/68&oldid=557520" இருந்து மீள்விக்கப்பட்டது