பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாண்பதற்கு அருமையாக இருக்கும். என்ற நிதர்சனமான உண்மையை, தேர்ந்தெடுப்பவர்களான தேர்வுக் குழுவினர் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண், ஆய்தல் அறிவுடையார் கண்ணதே' எனும் பாடலுக் கேற்ப, தங்களுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாட்டையெல்லாம் நீக்கிவிட்டு, திறமையுள்ள ஆட்டக்காரர் யார், என்பதைக் கண்டு கொள்வதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்து, ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நமக்கு வேண்டியவர்கள் என்பதற்காக ஆற்றல் இல்லாதவர்களைத் தேர்ந்தெடுப்பதும், வேண்டாத வர்கள் என்பதற்காக திறமையுள்ளவர்களைத் தள்ளி வைப்பதும் மனசாட்சியற்ற மதோன்மத்தர்கள் வேலையாகும். தன்னை ஒரு தகுதியானவர் என்ற நம்பிக்கையில் தேர்வுப் பணிக்குரியவராக்கியவர் களுக்குச் செய்கின்ற நம்பிக்கைத் துரோகமாகும். இது கடைந்தெடுத்த அநியாயம் என்பதை தேர்வுக் குழுவினர் மறந்துவிடக் கூடாது.

'ஆட்டம் வளர வேண்டும், நல்ல ஆட்டக்காரர்கள் பெருகிட வேண்டும்’ என்ற கொள்கையிலே தான் விளையாட்டுத் துறையின் விழுமிய எதிர்காலம் சென்று கொண்டிருக்கிறது. நல்ல ஆட்டக்காரர்கள் சுயநலக் காரர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும்.

ஒதுக்கித் தள்ளப்படுகின்ற உயர்ரக விளையாட்டு வீரர்கள் தங்களுக்குரிய உண்மையான தகுதி நிறைந்த ஆடும் வாய்ப்பை இழக்க நேரும்போது, ஆட்டத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/73&oldid=557526" இருந்து மீள்விக்கப்பட்டது