பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 ફ઼િ கோகோ ஆட்டம்

மீதே இனம் புரியாத வெறுப்பு கொண்டு விளையாடு, வதிலிருந்தே விலகிக் கொள்ளவும், ஒதுங்கிப் போய். விடவும் வழி வகுக்கின்றது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது அறிவுள்ளவர்கள் செயலல்ல. பைத்தியங் களின் தன்மையாக இருக்கலாம். நல்லவர்கள் என்பதால் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், நன்ம்ை செய்ய முன்னே வந்து தீமை செய்து கொண்டு; விளையாட்டுத் துறைக்குப் பணியாற்றுகின்றேன் என்பது, குளிர் காய வீட்டைக் கொளுத்துகிறவன் கதையாகவே போய்விடும்.

ஒரு குழு சிறப்பாக ஆடும்போது, அதற்குப் பின்னணியில் மறைந்து கொண்டு, ஒளிர்பவர்கள் தேர்வாளர்கள்தான். அந்தக் குழு புகழ் பெறும்போது, தேர்வாளர்களும் புகழ் பெறுகின்றனர். புகழ் வரும் பணியைத் தான் அறிவுடையவர்கள் செய்வார்கள். பிறர் ஏசப் பணிபுரிபவர்களை நாம் எந்தப் பெயரிட்டு அழைப்பது?

நியாயமாகவும் நேர்மையாகவும் பொது வாழ்வில் நடந்து கொள்ள, இந்த ஒரு அரிய பொன்னான வாய்ப்பு: ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் மூலமாகத் தான் கிடைக்கிறது. அந்த அற்புத வாய்ப்பை அநாவசியமாகப் பயன்படுத்தலாமா? பாழ்படுத்தலாமா? குறுக்கு வழியிலே தான் தோன்றித்தனமாக தடித்தனத்துடன் நடந்து கொள்வது, கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வது போன்றதல்லவா?

இத்தனைக்கும் மேலாக, ஒரு குழுவானது உருவாகி வெற்றி பெறும்போது, வட்டம், மாவட்டம், மாநிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/74&oldid=557527" இருந்து மீள்விக்கப்பட்டது