பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கோகோ ஆட்டம்


1. உட்காரும் முறை.

2. விரட்டித் தொடும் முறை.

3. விரட்டித் தொடும் திறன் நுணுக்கங்கள்.

1. உட்காரும் முறை (Sitting Posture)

முதலில், தனக்குரிய கட்டத்தில் உட்காரப் பழகிக் கொள்ள வேண்டும். ஓடுவதற்குத் தயாராக நிற்கின்ற பந்தயக் குதிரையைப்போல, உட்கார்ந்திருக்கும் நிலையிலும், தயாராக இருக்க வேண்டும்.

எந்த சமயத்தில் 'கோ' தனக்கு வரும் என்று தெரியாதாகையால், தன்னருகில் ஓடி வந்து, திடீரென்று தன் குழுவினர் 'கோ' கொடுத்துவிட்டால், உடனே எழுந்து ஓடிவிடுகின்ற தன்மையில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தால் சுறுசுறுப்பு இருக்காது. உடலே மந்தமாகத்தான் இருக்கும். மதமதர்ப்பு இருக்கும்போது, உணர்வின் விறுவிறுப்பும் இருக்காது. ஆடி அசைந்து கொண்டு ஓடத் தொடங்கினால், யாரை விரட்ட முடியும்? எப்படித் தொட முடியும்?

ஒரு ஓட்டக்காரரைத் தொட்டால் 1 வெற்றி எண் கிடைக்கும். உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஏழு நிமிடத்தில், எத்தனை ஓட்டக்காரரைத் தொடுகின்றீர்களோ, அத்தனை வெற்றி எண்கள்தான் கிடைக்கும்.

மொத்த வெற்றி எண்களைக் கணக்கிட்டுத்தானே ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/78&oldid=1377512" இலிருந்து மீள்விக்கப்பட்டது