பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77



ஒரு வெற்றி எண் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கின்ற குழுக்கள் எத்தனையோ உண்டு என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்து, சுறுசுறுப்பாக உட்கார்ந்து, சுறுசுறுப்பாக எழுந்தோடுகின்ற முறையை முதலில் தெளிவாகத் தெரிந்து கொண்டு, சிறப்பாகப் பின்பற்றி வரவேண்டும்.

1. எப்பொழுதும் எழுந்து ஓடுவதற்கு ஏற்றாற்போல உள்ள அமைப்பில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். (படம் காண்க)


1. சரியான உட்காரும் முறை 2. தவறாக உட்காரும் முறை

முதலில் உட்கார்ந்திருப்பவர் தயார் நிலையில் இருக்கிறார். அதுதான் சரியான உட்காரும் முறை. சர்வசாதாரணமாக அடுத்தவர் அமர்ந்திருப்பது தவறான உட்காரும் முறையாகும்.

2. 'சோம்பலாக அமர்ந்திருப்போம். சந்தர்ப்பம் வரும்போது துள்ளியெழுந்து ஓடிவிடலாம்' என்ற கற்பனை நினைவுடன் உட்காரவே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/79&oldid=1377453" இலிருந்து மீள்விக்கப்பட்டது