பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

79


சற்று ஏமாந்து போனால், மிக எளிதாகத் தொடப்பட்டு விடுவார்கள். அதனால், கம்பத்தினருகில் நின்று கொண்டு ஆடத்தான் முயல்வார்கள்.

இந்த காரணத்தினால்தான், மிக வேகமாக ஓடி விரட்டும் ஆற்றல் உள்ளவர்களை, கம்பத்தினருகில் இருக்கும் கட்டங்களில் அமரச் செய்ய வேண்டும்.

5. எக்காரணத்தைக் கொண்டும் மந்தமான ஆட்டக்காரர்களை கம்பத்திற்கு அருகேயுள்ள கட்டங்களில் உட்காருமாறு செய்துவிடுவது கூடாது. சதா காலமும் தயார் நிலையில் இருக்கின்றவர்களையே அமர்த்த வேண்டும்.

இவ்வாறு உட்கார வேண்டிய நிலையினை புரிந்து கொண்ட பிறகு, இனிமேல் உற்சாகமாக விரட்டித் தொடக்கூடிய தன்மையும் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் என்பதால், அடுத்த பகுதியில் அதனைஅ விரிவாகத் தந்திருக்கிறோம்.

2. விரட்டித் தொடும் முறை

1. ஆடுகளத்திற்குள் மூவர் மூவராகத்தான் எதிர்க்குழு ஓட்டக்காரர்கள் வருவார்கள். அந்த மூவரில் மந்தமான, திறமையிலா (Weak) ஆட்டக்காரர் யார் என்பதை புரிந்து கொண்டு, அவரைத்தான் முதலில் விரட்டித் தொட முயல வேண்டும்.

மந்தமான திறனில்லா ஆட்டக்காரரைத் தொட்டுவிட எளிதாக முடியும். அது ஏனெனில், வெற்றி எண் பட்டியலில் வெற்றி எண்களை அதிகமாக்கிவிட வெண்டும் என்பதுதானே ஆட்டத்தின் நோக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/81&oldid=1377416" இலிருந்து மீள்விக்கப்பட்டது