பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 藍 81

ஒருவரையே குறிவைத்து விடாது விரட்டும் போது, தொடர்ந்து விரட்டி அவர் அயர்வடைகிற பொழுது விரைவாக ஒடித் தொட்டு வெளியேற்றிவிட வேண்டும். இதுவே தந்திரமான ஆட்டமாகும்.

6. ஒடி விரட்டுபவர் மற்ற ஒட்டக்காரர் அல்லது ஒட்டக்காரர்களை கம்பம் இருக்கும் பக்கத்திற்கு விரட்டிக் கொண்டு சென்று, அவர்கள் ஒடுகின்ற நேரத்தில், திடீரென்று, கம்பத்திற்கருகில் உள்ள கட்டத்தில் அமர்ந்திருப்பவருக்கு 'கோ' கொடுத்துவிட வேண்டும். அவர் திடீரென்று பாய்ந்து தொட்டுவிடும் வாய்ப்பு வந்துவிடும்.

அதனால் தான் முன்கூட்டியே ஆட்டக்காரர்களை அமர்த்தும்போது, விரைவாக ஒடும் ஆட்டக்காரர்களை அமரச் செய்ய வேண்டும் என்று முன்னரே கூறியிருந்தோம்.

7. கம்பத்தினருகில் ஆடும்போது தான், ஏமாற்றி ஆட்டக்காரர்களைத் தொட ஏதுவாக இருக்கும். உதாரணமாக, கம்பத்தின் அருகில் ஒட்டக்காரர் ஒருவர் வந்துவிட்டதாகக் கொள்வோம். ஒடி விரட்டிக் கொண்டு இருபவர் கடைசிக் கட்டத்தில் ஒரு காலை வைத்துக் கொண்டு, முன்னே ஓடுவது போல பாவனை செய்ய வேண்டும்.

ஒட்டக்காரர் பயந்து, முன்னே ஓடி தப்பித்தால் போதும் என்று முன்புறமாக வரும்போது, உடனே கோ' கொடுத்து அவரை எழுப்பி ஓடச் செய்யலாம். 'பிர் பின்புறமாக ஒட முயற்சித்தால், தானே ஒடிப் போய் தொடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/83&oldid=557536" இருந்து மீள்விக்கப்பட்டது