பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 碘 கோகோ ஆட்டம்

ஆகவே, ஒட்டக்காரரை ஏமாற்றி ஆடுகின்ற ஆட்டமானது கம்பத்தினருகில் தான் முடியும் என்பதை ஆட்ட வல்லுநர்கள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து, இந்த ஆட்ட முறையையே பின்பற்றி வருகின்றார்கள்.

8. ஒடி விரட்டுகின்றவர் எப்பொழுதும், ஒடுகினற சமயத்தில் கையை மறுபுறம் நீட்டி, எட்டித் தொடுவது போலத்தான் ஒட வேண்டும். அப்பொழுது தெறித்து ஒடுகின்ற ஒட்டக்காரர்கள் உட்கார்ந்திருப்பவரின் முன்பக்கமாக வர நேர்ந்தால், 'கோ' கொடுத்து எழுப்பிவிடுகின்ற வாய்ப்பினையும் அது உண்டாக்கி விடும்.

9. கம்பத்தின் அருகிலே ஒட்டக்காரர் சிக்கிக் கொள்கிறபோது, குறுக்குக் கோட்டருகிலே வந்து முடிந்தவரை கையை மறுபுறம் நீட்டி, ஒட்டக்காரரைத் தொட முயல வேண்டும். அவ்வாறு எட்டித் தொட முயற்சிக்கும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சம நிலை (Balance) இழந்துபோய், குறுக்குக் கோட்டைத் தொட்டோ அல்லது கடந்தோ போய்விடத் கூடாது. அது தவறாகும் (Foul).

குறுக்குக் கோட்டைக் கடந்து ஒட்டக்காரரைத் தொட்டுவிட்டாலும் அதனால் அவர் ஆட்டமிழக்சி மாட்டார்.

எனவே, கையை முழுதும் நீட்டி மறுபுறத்தி: உள்ளவரைத் தொட முயலும்போது; கம்பத்தினருகி: இருந்தால் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு தொடலா' ஆனால், உட்கார்ந்திருக்கும் தன் குழுவினரைப் பிடித்து" கொண்டு மறுபுறம் கையை நீட்டித் தொட முயற்சிக்கி

ro

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/84&oldid=557537" இருந்து மீள்விக்கப்பட்டது