பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

85


உங்களை ‘கோ’ கொடுத்து எழுப்பிவிடுகிறார் என்றால், எதிரே ஓடுவோர் உங்களை ஏய்த்து திசை திருப்பிவிட முயற்சிப்பார்.

நீங்கள் அவசரப்படவோ, ஆத்திரப்படவோ, நிதானத்தை இழந்துவிடவோ கூடாது. நீங்கள் உட்கார்ந்திருக்கும் பக்கமுள்ள கோட்டிலேயே கொஞ்ச தூரம் ஓடினால், நீங்கள் விரும்புகின்ற பக்கமாக அவரது ஓடுகின்ற திசையை மாற்றிவிட்டு, பிறகு அவரது பின்னாலே வேகமாக ஓடி விரட்டித் தொட வேண்டும்.

விரட்டித் தொடுகின்ற முறைகளை கண்டோம். அவற்றிலே பல திறன் நுணுக்கங்கள் (Techniques) இருக்கின்றன. அவற்றை ஆர்வமுடன் பயின்று, பழகித் தேர்ந்துவிட்டால், ஆட்டத்தில் வேகம் நிறைந்துவிடுவது போலவே, வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும் என்பதால், அடுத்து வரும் பகுதியில், ஒரு சில திறன் நுணுக்கங்களை விளக்கமாகக் கூறியுள்ளோம்.

3. விரட்டித் தொடும் திறன் நுணுக்கங்கள்
(Skills in chasing)

1. கம்பத்தருகே தொடுதல் (Touching at the post)

ஓட்டக்காரர்கள் சிலர் கம்பத்தைப் பிடித்தவாறு நின்றுகொண்டு, ஓடி விரட்டுபவரை வெகுகாலமாக ஏமாற்றியவாறு காலத்தைப் போக்கிக் கொண் டிருப்பார்கள். அத்தகைய ஆட்டக்காரர்களை அவ்வளவு சுலபமாகத் தொட்டு வெளியேற்றிவிட முடியாது.

ஆகவே, அவர்களை சாமர்த்தியமாகத் தொட்டுவிடக் கூடிய திறனாற்றலே இந்தக் கம்பத்தருகே தொடும் முறையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/87&oldid=1377621" இலிருந்து மீள்விக்கப்பட்டது