பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 கோகோ ஆட்டம்

கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார் ஒரு ஒட்டக்காரர் என்று வைத்துக் கொள்வோம். ஒடி விரட்டுபவர் கம்பத்தின் பக்கத்தில் உள்ள கட்டத்தில் உட்கார்ந்திருப்பவரின் பின்னால் வந்து நிற்கிறார். இப்பொழுதுதான் அந்தத் தந்திர முறை தொடங்குகிறது.

கம்பத்தினை பிடித்துக் கொண்டு நிற்கும் ஒட்டக்காரரை, ஒடி விரட்டுபவர் 'கோ' கொடுக்கப் போகிறார் என்று நம்புவது போன்ற பாவனை செய்ய வேண்டும். அவ்வாறு பாவனை செய்வதைப் பார்க்கின்ற ஒட்டக்காரர், உட்கார்ந்திருப்பவர் எழுந்து தன்னை நோக்கி, ஒடி வரப்போகின்றார் என்பதாக நினைத்து, அதற்கேற்ப தன்னைத் தயார் செய்து கொண்டிருப்பார். அதனால், கம்பத்தை பிடித்தவாறு ஆயத்தமாகி நிற்பார்.

அதே நேரத்தில், 'கோ' கொடுக்கப் போகின்றவர். தன்னை நோக்கி ஓடி வருவார் என்று கனவிலும் நினையாதவராக அவர் நிற்கின்ற சமயத்தில், இவர் 'கோ' கொடுக்காமல் கம்பத்தை நோக்கி ஒடிப்போக வேண்டும்.

தன்னை நோக்கி அவர் ஒடி வருகின்றார் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்கின்ற ஒட்டக்காரர், ஒட முயற்சிப்பார். அந்த முயற்சி அவருக்கு வெற்றிகரமாக அமையாது போய்விட, தொடப்பட்டு வெளியேற்றப் படுவார். -

இதில் ஒரு முக்கியமான குறிப்பினைக் கவனிக்க வேண்டும்.

ஒடி விரட்டுபவர் தன் பின்னால் வந்து நின்று 'கோ' கொடுப்பது போல் பாவனை செய்தாலும், உட்கார்ந்திருப்பவர் எக்காரணத்தைக் கொண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/88&oldid=557541" இருந்து மீள்விக்கப்பட்டது