பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

87


அசைந்துவிடக் கூடாது. அவ்வாறு அசைந்துவிட்டால், அவர் ‘கோ’ கொடுத்தது போலாகிவிடும். அல்லது அவர் ‘கோ’ பெறுவதற்கு முன் அசைந்துவிட்டார் என்ற தவறுக்கு ஆளாக நேரிடும். அதனால், கோ கொடுத்தவர் அவர் இடத்தில் உட்கார, கோ பெற்றவர் எதிர்த்திசைப் புறமாக ஓடி, மீண்டும் வேறொருவருக்குக் கோ கொடுத்து அனுப்புகின்ற நிலைமை உருவாகிட , காலம் வீணாகும். ஆட்டக்காரர் தப்பித்துக் கொள்ளத் தயாராகிவிடுவார்.

எனவே, இந்தத் திறன் நுணுக்கத்தில், ஓடி விரட்டுபவர் காட்டும் பாவனை, ‘கோ’ கொடுக்கப் போகின்றார், என்று ஓட்டக்காரரை நம்பச் செய்ய வேண்டும். அதே சமயத்தில், உட்கார்ந்திருப்பவர் சமர்த்தாக ஆடாமல் அசையாமல், தனக்குக் கோ கிடைக்கும் வரை உட்கார்ந்திருக்கும் காரியத்தைச் செய்ய வேண்டும்.

ஓட்டக்காரர் தப்பி ஓட முயற்சி செய்தாலும் அப்பொழுதுதான், கம்பத்தினைப் பிடித்து நிற்கும் ஓட்டக்காரரை எளிதாகத் தொட்டு வெளியேற்றிவிட முடியும். இந்தத் திறமையில், விரட்டுகின்ற குழுவிலுள்ள இருவருமே திறமையாகச் செயல்பட வேண்டும். பயிற்சி காலத்தின்போது, இதுபோன்ற திறமையில் பழகிப் பண்பட்டிருக்க வேண்டும்.

2. தந்திரமாகக் கோ தருதல் (Judgement kho)

முன்னர் கூறிய திறனே இதிலும் உண்டு என்றாலும், சற்றே மாறுபட்ட தந்திர முறை இதில் உண்டு.

கம்பத்தினைப் பிடித்துக் கொண்டு தந்திரமாகத் தப்பித்துக் கொள்ளத் தருணம் பார்த்து நிற்பவரை, முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/89&oldid=1377601" இலிருந்து மீள்விக்கப்பட்டது