பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$3 - - ॐ 懿 Ꮚ&ᎱᏊ&IᎢ ஆ-டி

பகுதியில் 'கோ' கொடுப்பது போல் பாவனை செய்து, கோ தராமல் ஒடிப்போய் தொட வேண்டும் என்று கூறியது உங்களுக்கும் தெரியும். இந்தத் திறமை மாறுபட்டது என்றால் எவ்வாறு என்று காண்போம்.

கம்பத்தைப் பிடித்துக் கொண்டு ஒட்டக்காரர் நிற்கிறார். ஒடி விரட்டுபவர் கம்பத்தருகில் உள்ள கட்டத்தில் அமர்ந்திருக்கும் விரட்டுபவர் பின்னால் நின்று கொண்டிருக்கிறார். இப்போது ஓடிவிரட்டுபவர் தன்னை வந்து விரட்டித் தொடப் போகின்றார் என்று எண்ணுகின்ற அளவுக்கு 'ஓடி விரட்டுபவரின் பாவனை இருக்க வேண்டும்.

தன்னை வந்து தொடப் போகின்றார் என்று நினைத்த உடனே அந்த ஒட்டக்காரர், கம்பத்தை விட்டுவிட்டு ஒடத் தொடங்குவார். அவர் ஒடத் தொடங்கியவுடனேயே, இவர் கோ கொடுத்து எழுப்பிவிட, எழுந்தவர் எளிதாகத் தொட்டுவிடுவார்.

நீளுகின்ற கையைப் பார்த்தவுடன் அவர் தன்னை வந்து தொடப் போகின்றார் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு ஒட்டக்காரர் ஒடத் தொடங்கி உட்கார்ந்திருப்பவரின் முன்னே வருகிறபொழுது உடனே 'கோ'தந்திரமாகக் கொடுத்துவிட வேண்டும்.

அதுவரையிலும் உட்கார்ந்திருப்பவர் அசையக் கூடாது. ஒடி விரட்டுபவரின் கால் அல்லது காலின் ஒரு பகுதி அந்தக் குறுக்குக் கோட்டைக் கடந்து போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒட்டக்காரரை நம்ப வைக்கின்ற பாவனையும், அதற்கு ஏற்பத் தயார் நிலையில் அசையாமல் இருக்கும், ஒட இருக்கும் விரட்டுபவர் இவர்களின் திறமையே சிறந்த வெற்றியைக் கொடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/90&oldid=557543" இருந்து மீள்விக்கப்பட்டது