பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

89



இதில் அவசரப்படலாம். ஆனால் அந்த அவசரத்திலும் ஆழ்ந்த நிதானமும் தேவை என்பதை முக்கியமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

3. தாவித்தொடல் (Diving)

இந்தத் திறனை எல்லோருமே செய்துவிட முடியாது. தைரியம் உள்ளவர்கள், தன்னம்பிக்கை நிறைந்தவர்களே இந்த சாதனையான ஆற்றலை திறம்படச் செய்ய முடியும்.

ஓடி விரட்டுபவர் வேகமாக ஓடுகின்ற ஓட்டக் காரரைத் தொட விரட்டிக் கொண்டு ஓடுகின்றார். ஓடுவோருக்கும் விரட்டுவோருக்கும் இடையே குறிப்பிட்ட அளவு தூரம் இடைவெளி இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஓட்டக்காரரின் வேகமும் விரட்டுபவரின் வேகமும் சமமாக இருந்தால், ஓட்டக்காரரைத் தொட முடியாமல்போகும். அவரும் தப்பித்துக் கொள்ள முடியும்.

அப்படி ஒரே வேகத்துடன் ஓடிக் கொண்டிருப்பவர் களுக்கிடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க, இப்பொழுது ஓடி விரட்டுபவர் ஒரு காரியம் செய்கிறார். அதாவது ஓடிக் கொண்டிருக்கும்போதே, ஆற்றில் பாய்வது போலத் தாவி, அவர் மேல் பாய்வதுபோல் தரையில் விழுகிறார். தரையில் விழுவதற்கு முன்னே ஓட்டக்காரரின் உடலையோ அல்லது உடலின் ஒரு பகுதியையோ தொட்டவாறு விழுகிறார்.

இவ்வாறு விழுவது கட்டாந்தரையில் தான் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும். மிகவும் ஆபத்தான ஆட்டமுறைதான் இது. கொஞ்சம் தவறிக் கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/91&oldid=1377639" இலிருந்து மீள்விக்கப்பட்டது