பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கோகோ ஆட்டம்


அதாவது, எக்காரணத்தை முன்னிட்டும் எல்லைக் கோட்டை கடந்து வெளியே போய்விடக் கூடாது என்பதுதான். ஆக ஒரு ஓட்டக்காரர் ஓடுவதற்கு முழு சுதந்திரம் உண்டு என்றாலும், அவ்வாறு ஓடுவது சுலபமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.

விருப்பம்போல் ஆடுகளத்திற்குள்ளே ஓடுகின்ற முறையை மறந்துவிடுவோம். விரட்டுகின்றவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்கின்ற தந்திர முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

1. ஆடுகளத்திற்குள்ளே மூவர் மூவராகத்தான் உள்ளே சென்று ஆட வேண்டும். அவ்வாறு உள்ளே வருகின்ற மூன்று ஓட்டக்காரர்களும், ஒரே இடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கக் கூடாது; ஆடுகளத்தில் ஆங்காங்கே தனித்தனியாக பரவலாக இருப்பதுபோல் நின்று தயாராக இருக்க வேண்டும்.

2. அப்பொழுதுதான், விரட்டுகின்றவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட வசதியாக இருக்கும். ஒருவர் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தால், திடீரென்று ஓட முயலும்போது இடித்துக் கொள்ளவும், வழி தடுமாறவும் இடநெருக்கடி ஏற்படவும் போன்ற அசௌகரியங்கள் உண்டாகி, அதனால் சிக்கிக்கொள்ள நேரிடும்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஓட்டக் காரர்கள் எந்த நேரத்திலும் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

3. ஒவ்வொரு ஓட்டக்காரரும் உடனே (ஓடித் தப்பித்துக் கொள்ளக்கூடிய அளவில் நின்று கொண்டிருக்க வேண்டும். எந்த நிமிடத்தில் யாரை யார் விரட்டுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/96&oldid=1377532" இலிருந்து மீள்விக்கப்பட்டது